திருப்பதியில் பரபரப்பு பக்தர்கள் வசதிக்காக கட்டிய கருட மேம்பாலம் இடிந்தது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் வெளிமாநில பக்தர்கள், திருப்பதி நகருக்குள் வரும்போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக நகருக்கு வெளியே  பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சானூரிலிருந்து  கபில தீர்த்தம் வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பதி மாநகராட்சி சார்பில் கருட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பாலத்தின் இணைப்பு கட்டுமானங்களை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலத்தின் இணைப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணியில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததால், திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>