×

சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. பெங்களூரு சிறைச்சாலையில், கடந்த 4 ஆண்டுகளாக அவர் சாதாரண வகுப்பில் இருந்தார். முதல் வகுப்புக்கு தகுதி இருந்தும், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விபரங்களை, அவரது குடும்பத்தினர் சிறைத்துறையிடம் ஒப்படைக்காததால், சாதாரண வகுப்பில் தங்க நேரிட்டது. சாப்பாட்டுக்காக சாதாரண கைதிகளோடு வரிசையில் நின்றதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்காக அலைகின்றனர்.

அதிமுக அரசு மத்திய அரசின் அடிமை அல்ல. எதைப் பெற வேண்டுமோ, அதை பெற்றோம். தமிழகத்தில் எய்ம்ஸ் மற்றும் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. மாநில உரிமைக்காக எதை எதிர்க்க வேண்டுமோ, அதை இந்த அரசு எதிர்க்கிறது. விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வரும். முதல்வரைப் போல, ஓபிஎஸ்சும் விரைவில் பிரசாரத்தை தொடங்குவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Sasikala ,relatives ,Pukahendi , Sasikala's relatives Wandering property: Pukhalendi charge
× RELATED அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை