×

அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து குறித்து, அதிமுக தேர்தல் குழு முடிவு செய்யும்.

அதிமுகதான் பாஜகவை தேடி வந்ததாக அக்கட்சியின் நிர்வாகி சி.டி.ரவி பேசியதற்கு, அதிமுகவில் கூட்டணி கட்சியினரின் கருத்து தொடர்பாக பதில் கூற குழு போடப்பட்டுள்ளது. அக்குழு பதில் கூறும். எப்போது தேர்தல் வரும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது. இப்போது மக்களை சந்திக்க போகிறோம். நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள்தான் எஜமானர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Cellur Raju ,government ,AIADMK , Will the AIADMK rule? Can't say now: Interview with Minister Cellur Raju
× RELATED எந்த ஆட்சியிலும் குற்றங்களை தடுக்க...