×

திமுக ஆட்சிக்கு வரும்: முதல்வர் எடப்பாடி பிரசாரத்தால் அதிமுகவினர் அதிர்ச்சி

கோவை: திமுக அடுத்து ஆட்சிக்கு வரும் என்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் கோவை மாவட்டம் முழுவதும் திறந்த வேனில் சென்றபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கிணத்துக்கடவில் பிரசாரம் செய்த அவர், ‘‘இன்றைக்கு ஆட்சிக்கு வருகின்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம்னு சொல்லுங்க’’ என பேசினார்.  இது பேச்சின் வீடியோ பதிவு இப்போது வைரலாக பரவிவருகிறது. திமுக அடுத்து ஆட்சிக்கு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


Tags : DMK ,campaign ,Edappadi ,AIADMK , DMK to come to power: AIADMK shocked by Chief Minister Edappadi's campaign
× RELATED வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக...