×

முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

பவானி:  பவானியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர்  ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அமைச்சர்  கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி நகர், ஒன்றிய  பகுதிகளில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகங்களை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர்  கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

தற்போது தலைவராக உள்ள  அ.தி.மு.க.வினர் 60 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். ஓரிரு தேர்தல்களுக்குப்  பின்னர் எங்களுக்கு வேலையில்லை. நேரம், காலம் எப்படி வேண்டுமானாலும்  மாறலாம். தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராவோம் என எடப்பாடி பழனிசாமி கனவுகூடக்  கண்டிருக்க மாட்டார்.
ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பின்னால் பவானி தொகுதிக்குகூட அந்த வாய்ப்பு வரலாம். அ.தி.மு.க.வில் சாதாரணத்  தொண்டன், மிகப்பெரிய பதவிக்கும், பொறுப்புக்கும் வரமுடியும். இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார். கருப்பணன் தற்போது பவானி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Edappadi ,KC Karuppanan ,Chief Minister , Edappadi as the Chief Minister He would not have even dreamed of it: Minister KC Karuppanan's speech
× RELATED மின்வாரியத்தில் கேங்மேன் பணி...