×

மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராமதாஸ்: பாலகிருஷ்ணன் பேச்சு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தொகுதி மக்கள் கோரிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டும் போராட்டமாக மாறியுள்ளது. டெல்லியை போல் தமிழ்நாட்டு விவசாயிகளும் ஒரு நாள் போராட்டம் நடத்துவார்கள். 100 நாள் வேலைக்கு கமிஷன் வாங்குகிற அரசாங்கமாக எடப்பாடி அரசு உள்ளது. உள்ளாட்சித்துறை கொள்ளையாட்சி துறையாக மாறி வருகிறது. டாக்டர் ராமதாஸ் மட்டும்தான் வன்னியர்களின் தலைவரா? அவர் சாதிகளை பிரித்து 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகிறார். அவர் போராட்டம் நடத்துவது இட ஒதுக்கீட்டிற்காகவா அல்லது எடை ஒதுக்கீட்டிற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விரட்டும் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்றார்.

Tags : Ramadas ,speech ,Balakrishnan , The unity of the people Ramadas disrupts: Balakrishnan speech
× RELATED சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான...