ஜனாதிபதி குடியரசு தின உரை தேசத்தின் நலன் பாதுகாக்கப்படும்

புதுடெல்லி: நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாவது: கொரோனா பாதிப்பை தொடர்ந்து பல கட்டங்களாக கொண்டுவரப்பட்ட தளர்வுகளானது நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக தொடர்கின்றன. அரசு விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். இயற்கை இடர்பாடுகள், கொரோனா என பல சவால்களை எதிர்கொண்டபோதிலும் உற்பத்தியை விவசாயிகள் தக்க வைத்துள்ளனர். நாட்டில் உள்ள குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். மோசமான சீதோஷ்ண நிலையிலும் நமது பாதுகாப்பு படை வீரர்கள் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருக்கின்றனர். எந்த விலை கொடுத்தாவது தேச நலன் பாதுகாக்கப்படும். 

Related Stories: