ரூ.1 லட்சம் குட்கா மினி லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது

பல்லாவரம்: தாம்பரம் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மதனபுரம் பகுதியில் நேற்று பீர்க்கன்காரனை  போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனையிட்டதில்,  1,040 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், குட்கா பொருட்களை மினிலாரியுடன் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

Related Stories:

>