×

திருப்போரூர் கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் பலி

திருப்போரூர்:  சென்னை கொடுங்கையூர், சேலைவாயிலை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கிருஷ்ணவேணி (43). நேற்று காலை ஏழுமலை, கிருஷ்ணவேணியுடன் திருப்போரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து, வீட்டுக்கு புறப்படும்போது, கந்தசுவாமி கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, கோயிலில், சாமி தரிசனம் முடிந்து, அங்குள்ளகுளத்தின் படிக்கட்டுகளில் நின்று 2 பேரும் மீன்களுக்கு பொரி போட்டனர். அப்போது கிருஷ்ணவேணி, திடீரென குளத்தில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஏழுமலையும் குளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, 2 பேைரயும் மீட்டனர். அதற்குள் கிருஷ்ணவேணி இறந்துவிட்டார்.
புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (37). அங்குள்ள தனியார் பண்ணையில் வேலை செய்தார். நேற்று சந்திரன், தோட்டத்தில் வேலை செய்தார். மதியம் உணவு முடிந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டி கரை மீது அமர்ந்துள்ளார். அப்போது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, தொட்டியில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தார். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Thiruporur , In the Thiruporur temple pond Failed and killed the girl
× RELATED அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து டிரைவர் தற்கொலை