×

அரியனூர் கிராம சேவை மையத்தில் மினி கிளினிக் பணி

செய்யூர்: தினகரன் செய்தி எதிரொலியாக அரியனூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் மினி கிளினிக் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கிராம புறங்களில் தமிழக அரசு சார்பில் 2000  மினி கிளினிக் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியிலும், அதற்கான பணிகள் நடக்கின்றன. இப்பகுதியில் மினி கிளினிக் அமைப்பதற்காக அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். ஆனால் கிளினிக் அதற்கான போதிய இடம் இல்லை.

இதையடுத்து, கிராமத்தில் உள்ள கிராம சேவை மையத்தின் ஒரு பகுதியில் மினி கிளினிக் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான செய்தி கடந்த டிசம்பர் 12ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதைதொடர்ந்து, அரியனூர் ஊராட்சி கிராம சேவை மையத்தின் ஒரு பகுதியில், மினி கிளினிக் ஆரம்பிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த கட்டிடத்தில் வண்ணங்கள் பூசும் பணி நடந்து வருகிறது. இதனால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Ariyanur Grama Niladhari Center , At the Ariyanur Grama Seva Center Mini clinic work
× RELATED அரியனூர் கிராம சேவை மையத்தில் மினி கிளினிக் பணி