கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 706 கோடியில் நல திட்டங்கள் தொடக்கம்

நொய்டா: கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 706 கோடியில் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதி தலைநகர் என மாவட்டத்திற்கு அப்போது பாரட்டும் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உதயமான 71வது ஆண்டு நேற்று அம்மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கவுதம் புத்தா நகர் மாவட்டத்திலும் கொண்டாட்டம் களை கட்டியது. அதையடுத்து, மாவட்டத்தில் குடியரசு தின விழா இன்று கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதன் பிறகு மாவட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பார் என காவல்துறை எஸ்.பி இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.ஆனால், 71வது ஆண்டு கொண்டாட்டத்தில் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 706 கோடியில் 66 நலத் திட்டங்களை தலைநகர் லக்னோவில் இருந்து வீடியோ கான்பரன்சிங்கில் தொடங்கி வைத்து மாவட்ட மக்களுக்கு முதல்வர் யோகி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அப்போது உரையாற்றிய யோகி, ஜேவரில் உருவாகும் சர்வதேச ஏர்போர்ட், முதலீட்டாளர்கள் இந்த மாவட்டத்தில் படையெடுக்கச் செய்துள்ளது. உண்மையில் கவுதம் புத்தா நகர் உத்தரப்பிரதேசத்தின் நிதி தலைநகரம் என பாராட்டினார்.

முதல்வர் யோகி தொடங்கிய சில திட்டங்கள் விவரம்: நொய்டா செக்டார் 33ஏயில் அமைக்கப்பட்ட சிற்ப கைவினை பொருட்கள் மையம் திறப்பு. நொய்டா, கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே மறு சீரமைப்பு திட்டம், மாட்டு தொழுவம் அமைக்கும் திட்டம், செக்டார் 78ல் வேத வனப்பூங்கா திட்டம், சுரங்க பார்க்கிங் திட்டம், பல்லுயிரி பூங்கா திட்டம். புதிதாக 4 காவல் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா. பாதுகாப்பான நகரம் என்பதை உறுதி செய்யும் வகையில் 1,660 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், மேலும் 11 காவல் நிலையம் மற்றும் 2 காவல் தணிக்கை சாவடி அமைக்கும் திட்டம்.

Related Stories: