ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு: 9 மாதங்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா

புதுடெல்லி: டெல்லியில் 9 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஒரே நாளில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று ஒரே நாள் கொரோனா தொற்று பாதிப்பு 148ஆக இருந்தது. கடந்த 9 மாதங்களுக்கு பிறகு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தொற்று பதிவாகி உள்ளது. மேலும் ஜனவரியில் இதுவரை 4வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு 200க்கும் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,34,072 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் டெல்லியில் புதியதாக 5 பேர் கொரோனாவால் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 10,813 ஆனது. தற்போது டெல்லியில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளாக 1,694 பேர் உள்ளனர். நேற்று மட்டும் 48,450 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 32,651 ஆர்டி பிசிஆர் சோதனைகள், 15,799 ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள். கடைசியாக ஜனவரி 18ம் தேதி 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதே 9 மாதங்களில் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது. நேற்று 148 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதை விட குறைவான தொற்று பதிவானது.

Related Stories: