விவசாயிகள் டிராக்டர் பேரணி பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

புதுடெல்லி: தலைநகரில் இன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் உள்ளதையொட்டி, அந்த பகுதியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு டெல்லி போக்குவரத்து துறை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் குடியரசு தினநாளான இன்று  ‘கிசான் காந்தந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான வழிதடங்களையும் போலீசார் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். எனினும், போலீசார் பரிந்துரைத்த வழித்தடங்களை ஏற்க மறுத்த விவசாயிகள் சங்கம், டிராக்டர் பேரணி செல்லும் வழிதடங்கள் என மூன்று சாலைகளை தெரிவித்துள்ளனர். இதன்படி, சிங்கு, திக்ரி மற்றும் காஜிப்பூர் எல்லைகளிலிருந்து டிராக்டர் பேரணி தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதனால், டிராக்டர் பேரணி நடைபெறும் வழிதட சாலைகளை தவிர்க்குமாறு டெல்லிவாழ் மக்களுக்கு போக்குவரத்து துறை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக, என்எச்44, ஜிடி-கர்னால் சாலை மற்றும் என்எச்10 வரித்தடங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: