போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது

சென்னை: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் அருகே சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர், உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சுங்கச்சாவடியை சூறையாடினர். போலீசார் விசாரணையில், கடந்த 19ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி பாபு, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதால், அவரிடமிருந்து ரூ.4,500 ஐ ஊழியர்கள் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாபு, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது தெரிந்தது. இதுதொடர்பாக, பாபு (31) அஜித் (23), கந்தன் (40), விமல்ராஜ் (24), ரமேஷ் (39), சரவணன் (40) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>