×

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது

அண்ணாநகர்: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவரது மனைவி பாக்கியலட்சுமி (29). கடந்த சில வருடங்களுக்கு முன் இருவரும் காதலித்து, வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ‘‘புதிதாக தொழில் துவங்க உள்ளதால் உனது பெற்றோரிடம் ரூ.10 லட்சம் வாங்கி கொடு,’’ என பாக்கியலட்சுமியிடம் ஆனந்தராஜ் கூறியுள்ளார். அவர் வாங்கி தராததால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், மனைவியை அடித்து, உதைத்து, தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனர்.

Tags : Love wife tortured for asking for Rs 10 lakh dowry: Husband arrested
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது