புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: குடியரசு தினமான இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுவது போல் 402 புறநகர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- வேளச்சேரி, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, திருமால்பூர் ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுவது போல் 402 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

Related Stories:

>