நீட் தேர்வு மதிப்பெண் மோசடி தந்தை, மகள் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது கடந்த டிசம்பர் 7ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்சா கலந்து கொண்டார். அப்போது அவர் 27 மதிப்பெண்ணை 610 என மாற்றம் செய்து, அளித்த நீட் சான்றிதழ்களில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது, நீட் தேர்வின் மதிப்பெண்ணை தீக்சா அதிகரித்தது, போலி மதிப்பெண் சான்று வழங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்சா மற்றும் அவரது தந்தை பாலசந்திரனை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். இந்தநிலையில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி, செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குறைந்த காலமே நீதிமன்ற காவலில் இருந்துள்ளனர். இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு உடனே ஜாமீன் வழங்கினால், தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>