டிராக்டர் பேரணிக்கு அனுமதி கோரி கே.பாலகிருஷ்ணன் டிஜிபிக்கு கடிதம்

சென்னை: விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கோரி டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அடையாளமான டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளது சரியல்ல என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழகம் முழுவதும் நாளை (இன்று) அமைதியாக நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பதுடன் உரிய பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.

Related Stories:

>