×

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து புதிய தீர்மானம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடத்தப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமான குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டிக்கப்படாத நிலையில், அவர்களை பன்னாட்டு சட்டங்களின் முன் நிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ம் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான பிப்ரவரி 24ம் நாள் இலங்கை போர்க் குற்றம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது விவாதம் நடைபெறவுள்ளது.

அதை தொடர்ந்து மார்ச் 22ம் நாள் இலங்கை மீதான போர்க் குற்றம் குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரும் போது, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் இந்தியா அமைதி காக்கக் கூடாது. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு பொறிமுறையை ஏற்படுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்ரவரி 2ம் நாள் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

Tags : Sri Lankan ,UN Human Rights Council ,Ramadas ,Central Government , New resolution on Sri Lankan war crimes at UN Human Rights Council: Ramadas' request to the Central Government
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!