×

மாணவர்கள் கோரிக்கையை அலட்சியப்படுத்தினால் காங்கிரஸ் போராட்ட களத்தில் குதிக்கும்: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்த போதிலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை விடக் கல்விக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அநீதியை எதிர்த்துத் தான் கடந்த 46 நாட்களாக மாணவர்களும் பெற்றோர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தையும் அவர்கள் தொடர்ந்துள்ளனர். அவர்களது கோரிக்கையை மனசாட்சியுடன் பரிசீலித்து உடனடியாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்துமேயானால், அவர்களுக்குத் தோள் கொடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டக் களத்தில் குதிக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

Tags : Congress ,battlefield ,government ,Tamil Nadu ,KS Alagiri , Congress will jump on the battlefield if students ignore demand: KS Alagiri warns Tamil Nadu government
× RELATED காங்கிரசில் விருப்ப மனு தாக்கல் தொடக்கம்