நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பத்தாவது முறை கால அவகாசம் நீட்டிப்பு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், உறவினர்கள், பாதுகாவலர்கள், அதிகாரிகள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் என 150 பேருக்கு மேல் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்துள்ளனர். விசாரணை முடிவு பெறும் தருவாயில் மருத்துவக்குழு தொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 9 வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 6 மாத காலம் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: