டெல்லியில் மீண்டும் குளிர் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: கடும் பனியிலிருந்து மெதுவாக மீண்டு வந்த டெல்லியில், குளிரின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல இயக்குநர் எச்சரித்துள்ளார். வரலாறு காணாத பனிப்பொழிவை மாத தொடக்கத்தில் டெல்லி சந்தித்தது. ஜனவரியில் உத்தேசமாக 12 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ட வெப்பநிலை நீடிப்பது இயல்பான வானிலையாகும். ஆனால், நடப்பாண்டில் அதுவே 1.0 டிகிரி செல்சியசாக மிகவும் தாழ்ந்து, தண்ணீரை உறைபனியாக்கும் நிலையை ஏற்படுத்தியது. குளிரின் கடுமையால் வெளியில் தலைகாட்டவும் மக்கள் அச்சப்பட்டனர்.இரு வாரங்களுக்கு 3 அல்லது 4 டிகிரி என நீடித்த குறைந்தபட்ட வெப்பம், கடந்த ஒரு வாரமாக 8 டிகிரிக்கு அதிகரித்ததால், பனியின் தாக்கம் குறைகிறது என வானிலை மையத்தின் மண்டல இயக்குநர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில், பனிக்கொடுமை மீண்டும் டெல்லியில் உணரப்படும் என அவர் இப்போது எச்சரித்து உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘அதிகபட்ச வெப்பநிலை தோராயமாக 20 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதுவே இப்போது 15 டிகிரிக்கு வந்துள்ளது. அதற்கு ஈடுகட்டும் விதமாக குறைந்தபட்ச வெப்பமும் 7.4 டிகிரி செல்சியசில் இருந்து வேகமாக சரிந்து 4 முதல் 2 டிகிரி செல்சியசாக அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்’’, எனக் கூறியுள்ளார்.

Related Stories: