முதல்வர் எடியூரப்பா எந்த முடிவு எடுத்தாலும் அனைவரும் கட்டுப்பட வேண்டும்: துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தகவல்

பெங்களூரு: முதல்வர் எடியூரப்பா எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தெரிவித்தார். மைசூருவில் இது தொடர்பாக துணை முதல்வர் அஷ்வத்நாராயண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கியது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது, துறை ஒதுக்குவது முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள தனி சுதந்திரம். முதல்வர் எடியூரப்பா எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அரசியலில் சவால்கள், பிரச்னைகள் இருக்கும். அனைத்தையும் சமாளித்துக்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். அதிருப்தி ஏற்பட்டுள்ள அமைச்சர்கள் எங்களுடைய நண்பர்கள். இதனால் அவர்களுடன் அமர்ந்து பேசப்படும். ஒரு கட்சியில் அனைவரும் அண்ணன், தம்பி போல் ஒற்றுமையாக வேலை செய்வோம்.

 விவசாயிகள் டிராக்டர் பேரணி அமைதியாக நடத்த வேண்டும். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவுள்ளது. இது குறித்து அவர்களுக்கு வரும் நாட்களில் புரியும். அதே போல் வரும் நாட்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகை பதிவு கட்டாயம் செய்யப்படும். அப்போது அனைத்து விரிவுரையாளர்களுக்கு பாடம் நடத்த அவகாசம் வழங்கப்படும்’’ என்றார். 

Related Stories: