1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க கோரி மனுக்கள் வருகிறது: அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்

பெங்களூரு: 1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் வழக்கம் போல் ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்கள் வருகிறது. அதற்கு மாணவர்கள் கூட சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது, 8-9ம் வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு பி.யு.சி. கல்லூரிகளில் ஆப்லைன் வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனுக்கள் வருகிறது. இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தி சரியான முடிவு எடுக்கப்படும். இத்துடன் 1-ம் வகுப்பு முதல் வழக்கமான பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை, மனுக்கள் வந்துள்ளது. இதற்கு மாணவர்கள் கூட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 வித்யகாமா, யுடியூப், சந்தனா மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அனைத்து பகுதியில்  மாணவர்கள் எப்படி படித்து வருகின்றனர், எவ்வளவு படித்துள்ளனர் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கு விவரம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று அமைதியான முறையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி, பெங்களூருவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் தெரிவிக்க வேண்டியதை விவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ளது. குழுவினர் அறிக்கை வழங்கிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: