தங்கவயல் எட்கர் தி.மு.க கிளையில் மொழி போர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி

தங்கவயல்: தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் பலியான தியாகிகளுக்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தங்கவயல் மாரி குப்பம் எட்கர் எட்டாவது வார்டு திமுக கிளை சார்பில் இந்தி எதிர்ப்பு மொழி போர் தியாகிகளுக்கு 56 வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடைப்பிடிக்க பட்டது. நித்தியானந்தன் தியாகிகளின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய செயலாளர் பொன் சாரங்கபாணி, ``தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள்  நடத்திய போராட்டத்தில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா. ஜெயப்பிரகாசம், சின்னச்சாமி என்பவர் 1964ல் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில்தான் ஜனவரி 25ம் தேதி இந்த போராட்டம் துவங்கியது. போராட்டம் தமிழர்களுக்கு மொழி உணர்வையும், தாய் மொழி உரிமையையும் நிலைநாட்டியது. தியாகம் செய்த மற்றவர்களை என்றென்றும் நினைவு கூர்வோம்’’ என்றார். நிகழ்ச்சியில் பாபு, நிக்கோலாஸ் ராஜா அண்ணாதுரை, குளோரி, உமாதேவி, சுஜாதா, ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: