சசிகலாவுக்கு சர்க்கரை அளவு அதிகரிப்பு

பெங்களூரு: சசிகலாவுக்கு சர்க்கரை அளவு இன்று மதியம் 158-ஆக இருந்த நிலையில் இரவு 8 மணியளவில் 256-ஆக அதிகரித்துள்ளது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று காலை அதிகப்படியாக சர்க்கரை அளவு 208-ஐ எட்டிய நிலையில் சசிகலாவுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது சசிகலாவின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அதிக அளவு மிக சீராக உள்ளது. சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச சிகிச்சையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிறந்த மருத்துவர்கள் குழு சசிகலாவை கண்காணித்து வருகிறார்கள் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>