போராட்ட களத்திற்கு சென்ற காங். எம்பி மீது தாக்குதல்

சண்டிகர்: லூதியானாவில் காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு, சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் சிலரால் தாக்கப்பட்டார். டெல்லியின் எல்லையில் விவசாயிகள் ேபாராட்டம் நடத்தி வரும் நிலையில், சிங்கு எல்லையில் உள்ள குருதேக் பகதூர் நினைவு சின்னம் இருக்கும் இடத்திற்கு பஞ்சாப் மாநிலம் லூதியானா காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு வந்தார். அப்போது அவரை சிலர் தாக்கினர். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில், ‘குருதேக் பகதூர் நினைவு சின்னம் இருக்கும் இடத்திற்கு அருகே நான் சென்ற போது அங்கிருந்த சிலர், என்னை தள்ளிவிட்டனர். எனது தலைப்பாகையை இழுத்தனர். அப்போது எனது தலைப்பாகை கீழே விழுந்தது.

என்னை தள்ளிவிட்டது மட்டுமின்றி என்னை அவமானப்படுத்தினர். இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஈடுபட்டிருக்கக் கூடாது. என் மீதான தாக்குதலுக்கான காரணம் எனக்கு  தெரியவில்லை. என்னுடன் வந்த சிலரால் நான் அங்கிருந்து மீட்கப்பட்டேன். நான் காரில் ஏறி அமர முற்பட்ட போது, எனது காரும் தடிகளால் தாக்கப்பட்டது. இதனால் காரின் கண்ணாடி உடைந்தது. என்னை கொல்ல சதி ெசய்து என் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீந்த் சிங்கின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>