ஆர்டிஓ ஆபீசில் எழுத்தர் பலாத்காரம்: தானேயில் தகவல் ஆர்வலர் கைது

தானே: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த ஷரத் துமல் என்பவர் தகவல் அறியும் சட்ட ஆர்வலராக உள்ளார். இவர், தானே பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) சில தகவல்களை வேண்டி சுமார் 1,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அடிக்கடி போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் ஒருவரிடம் சில தகவல்களை கேட்டு மிரட்டி உள்ளார். பலமுறை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களிடமும், அவர் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பெண் எழுத்தரை அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், ஷரத் துமல் மீது விசாகா கமிட்டியிடம் புகார் அளித்திருந்தார். விசாகா கமிட்டி ஷரத் துமலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் கமிட்டி முன் ஆஜராகவில்லை. மேலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எழுத்தர், வாக்ல் எஸ்டேட் போலீசாரிடம் புகார் அளித்தார். அதையடுத்து ஷரத் துமலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: