கடலுக்கடியில் ஆய்வு செய்ய பாம்பு வடிவ ரோபோக்களை பயன்படுத்தும் நார்வே

நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயைக் கண்காணிக்க பாம்பு வடிவ ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.சுமார் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரோபோக்கள் முன்பகுதியில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் அரை கிலோ மீட்டர் ஆழத்தில் சுமார் 6 மாதங்கள் வரை தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்ட இந்த ரோபோக்கள் எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவுகளை அடைத்தல், வால்வுகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.தானாக இயங்கக் கூடிய பாம்பு ரோபோக்கள் சார்ஜ் குறைந்ததும் தானாகவே கடலுக்கு மேற்புரம் வந்து அருகில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ரீ சார்ஜ் செய்து கொள்ளும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: