உருளைக்கிழங்கின் கதை!

உருளைக் கிழங்கை சோலானம் டியூபரோசம் (Solanum tuberosum) என்பார்கள். உருளைக் கிழங்கு நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. பெரு நாடுதான் உருளைக் கிழங்கின் தாயகம்.  அங்கிருந்து கி.பி 1536ல் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது. பிறகு, ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. எல்லா தாவரங்களைப் போலவே உருளைக்கிழங்கு  என்பதிலும் ஒரே ரகம் இல்லை. ஆண்டீய மலைப்பகுதிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. இங்கு ஒரே பள்ளத்தாக்கில்கூட நூற்றுக்கும்  மேற்பட்ட வெவ்வேறு ரகங்கள் விளைகின்றன.

பெரு நாட்டில் தோன்றியிருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இருந்து வந்த வகையே இன்று அதிகம் பயிராகின்றன. ஐரோப்பாவில்  அறிமுகப்படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது. ஆனால், உருளைக்கிழங்கில் பல வகைகளைப் பயன்படுத்தாமல் ஒரேவகை மட்டுமே மீண்டும் மீண்டும்  பயிரிடப்பட்டது. இதனால், இந்தப் பயிருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டபோது அது பெரும் உணவுப் பஞ்சத்துக்கு வழிவகுத்தது. 1845ல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணுவான ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்ற ஒற்று தாக்கியது. இந்தக் கொள்ளைநோயால் பெருமளவு உருளைகள் அழிந்தன. இதனால், மேற்கு அயர்லாந்து போன்ற பகுதிகளில் பெரும் பஞ்சமே ஏற்பட்டது. சுமார் முந்நூறு வருடங்களில் ஐரோப்பியர் அந்த அளவுக்கு உருளைக்கு அடிமையாகியிருந்தனர். சோவியத் ஒன்றியம் இருந்தவரை அதுதான் உலகின் அதிகமான உருளை உற்பத்தியாளராய் இருந்தது. சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Related Stories: