டல்லடிக்குது குடியரசு தினம்!

இந்த ஆண்டின் இந்தியக் குடியரசு தினம்தான் இதுவரையான குடியரசு தினங்களிலேயே கொண்டாட்டங்கள் குறைவாக இருக்கப் போவது. கொண்டாட்ட நேரமும் வழக்கத்திலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.  காரணம் வேறு என்ன? கொரோனாதான்.டெல்லி ராஜபாதையில் குடியரசு தின ஊர்வலம் நிகழும் போது காண வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட உள்ளது.

 ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு மேல் வருவார்கள். இந்த ஆண்டு இருபத்தைந்தாயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.வழக்கமாய் ஏதேனும் ஒரு நாட்டைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர் பங்கேற்பார். இவ்வருடம் அதுவும் இல்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராய் பங்கேற்க இருந்தது. ஆனால்,  அங்கு புதியவகை கொரோனா பரவுவதைத் தொடர்ந்து அவர் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டார். எனவே சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 1966ம் ஆண்டு முன்னாள் லால் பகதூர் சாஸ்திரி இறந்ததை அடுத்து இந்திரா பிரதமரான வருடம், இதே போல் சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்திய கலாசாரத்தைப்  பிரதிபலிக்கும் பல்வேறு கலைக்குழுவின் பவனி மட்டும் வழக்கம் போல் உண்டு. ஆனால், அதிலும் பங்கு பெறுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். விஜய் செளக்கில் தொடங்கும் அணிவகுப்பு  வழக்கமாய் செங்கோட்டையில் முடியும். இவ்வருடம் தேசியப் பூங்காவிலேயே முடிய உள்ளது. அதாவது 8.2 கி.மீ தொலைவு, 3.3 கி.மீயாகக் குறைக்கப்பட்டுளது.

Related Stories: