×

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!!!

டெல்லி: கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி  தொடங்கி வைத்தார். இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 504 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக, பெரும்பாலான முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயங்குகின்றனர். இதற்கு கொரோனா தடுப்பூசி குறித்து பரப்பப்படும் வதந்திகள்  முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொடர்பான 2 தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி  செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தனிநபரோ, அமைப்போ, குழுவோ கொரோனா தடுப்பூசி தொடர்பாக வதந்தி மற்றும் அவதூறு பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இதில் முரண்பாடு என்னவென்றால், உலக நாடுகள் நம்மிடம் இருந்து தடுப்பூசி வாங்க தயாராக  உள்ளன. ஆனால். நம் நாட்டு மக்களில் பலர் அதை போட்டுக் கொள்ள தயங்குகிறோம். பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசிகளே உலகத்தில் கிடையாது. கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறம் மிக்கவை. எனவே, அனைவரும்  தயக்கமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். குறுகிய அரசியல் காரணங்களுக்காக, தடுப்பூசி பற்றி வதந்திகளை பரப்பக் கூடாது என்று தெரிவித்தார்.

Tags : state governments ,Union Home Ministry , Take action against those who spread rumors about corona vaccine: Union Home Ministry orders state governments !!!
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...