மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போகிறார் என முதல்வர் பழனிசாமி பேச்சு.. திமுக ஆட்சிக்கு வரும் என முதல்வரே கூறியதால் அதிமுகவினர் அதிர்ச்சி

கோவை :தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அடுத்து ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் பழனிசாமி கூறியது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பல்வேறு இடங்களில் உரையாற்றினார்.அந்த வரிசையில், கிணத்துக்கடவு பகுதியில் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது கூறி வரும் வாக்குறுதிகள் கூறினார். அடுத்து ஆட்சிக்கு வர உள்ள திமுக நிறைவேற்றக்கூடிய வாக்குறதிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே திண்டுக்கலில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேடச்சந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராக போகிறவர் என்று கூறியிருந்தார்.  எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், நாளைக்கு முதல்வராக கூடிய ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் என்றார். இதனால் அந்த கூட்டத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சரும் திமுக தான் அடுத்த ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>