ரூ.48,000 ஆயிரம் கோடியில் ராணுவத்துக்கு தேஜஸ் போர் விமானங்கள் விற்க ஒப்பந்தம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 13ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்கள், 10 எம்கே 1 பயிற்சி விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாதவன் நேற்று அளளித்த பேட்டி வருமாறு:

சீனாவின் ஜேஎப் 17 விமானத்துடன் ஒப்பிடும்போது, தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானமானது சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. இதற்கு, வானத்திலேயே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளது. இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடிக்கு விற்க, மத்திய அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: