சொல்லிட்டாங்க...

* இந்தியா ஒரு சிலரால் தன்னிறைவை எட்டவில்லை. உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் தற்போதுள்ள இடத்தை நாடு எட்டியுள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி.

* பா.ஜ. அரசு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளைகூட வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. - அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

* மக்கள் வரிப்பணத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழக அரசு விளம்பரங்கள் செய்து வருகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

* 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 82 ஆயிரம் பேர் டி.ஆர்.பி.யில் தேர்ச்சி பெற்று உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அவர்கள் மீண்டும் தேர்வெழுதினால் மட்டுமே பணிக்கு செல்ல முடியும். - அமைச்சர் செங்கோட்டையன்.

Related Stories:

>