×

அதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்: செந்தமிழன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்

இப்போதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தான் உள்ளார். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் பயணித்தவர் சசிகலா. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என சசிகலாவின் முன்வந்து நிற்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இது நாடறிந்த உண்மை. அதிமுக சசிகலா தலைமையின் கீழ் தான் இயங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. சசிகலா வெளியே வந்தபிறகு அவர் என்ன நினைக்கிறாரோ அதற்கேற்ப எங்களின் நடவடிக்கைகள் அமையும்.  

அமமுக முதலில் ஆரம்பிக்கும்போது அமமுகவை வைத்து அதிமுகவை கைப்பற்றுவோம் என்றே நாங்கள் ஆரம்பித்தோம். எனினும் சட்டவிதிமுறைகளின்படி அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். பொதுக்குழு சசிகலாவை தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே இல்லை. எனவே, நிச்சயமாக சசிகலா தலைமையில் தான் அதிமுக இயங்கும். அவர் வெளியே வந்த பிறகு அதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும். இதேபோல், தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார்கள். அவர் விரைவில் வெளியே வர வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

பொதுமக்கள் நலன் சார்ந்த கருத்து தெரிவிக்கும் அனைவருமே சசிகலா வெளியே வர வேண்டும், அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்றே நினைக்கிறார்கள். சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதை பார்த்தோம். ஆனால், அவர் முதலமைச்சராக பதவி ஏற்று 3வது மாதத்தில் இருந்து இதையே தான் கூறி வருகிறார். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்பது அமைச்சர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருக்கும் தெரியும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர் என அனைவரும் மனரீதியாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதனுடைய வெளிப்பாடாக தான் தற்போது நடக்கும் நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது.

மேலும், அதிமுகவில் உள்ள யாரும் எங்கள் கட்சி தலைமையுடன் இணைவது குறித்து வெளிப்படையாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால், பொதுவெளிகளில் சந்திக்கும்போது அதுபோன்ற நடவடிக்கைகள் தான் தென்படுகிறது.
ஒன்றிணைவது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. இருந்தாலும் சசிகலா என்ன சொல்கிறாரோ அதன்படி தான் அனைத்தும் நடக்கும். மீண்டும் ஒன்றிணைவது குறித்து சசிகலா என்ன சொல்கிறாரோ அது தான் அனைவரின் எண்ணமாக இருக்கும். அதன்படி அனைத்து நிர்வாகிகளும் செயல்படுவோம். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அதிமுகவிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் இருக்கும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர் என அனைவரும் மனரீதியாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதனுடைய வெளிப்பாடாக தான் தற்போது நடக்கும் நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது.

* சசிகலாவால் அதிமுகவுக்கு எந்த தொந்தரவும் வராது: புகழேந்தி, அதிமுக செய்தி தொடர்பாளர்
சசிகலாவின் தண்டனை நாட்கள் முடிந்தாகிவிட்டது. ஆனால், அவர் பரோலில் வெளியே சென்ற காரணத்திற்காக அவருக்கு தற்போது சிறைவாசம் தொடர்கிறது. அந்த கணக்குப்படி வரும் 27ம் தேதியுடன் சிறைவாசம் முடிகிறது. இந்த சூழலில் அவர் எப்படி சிறை சென்றாரோ அதே உடல்நிலையில் தான் மீண்டுவர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். சசிகலா விடுதலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கருத்தை தெளிவாக தெரிவித்துவிட்டார். சசிகலாவையோ, தினகரனையோ மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள் என அதிமுகவை பாஜ வற்புறுத்துவதாக கூறுவது அனைத்தும் பொய். பாஜ, அதிமுகவை வற்புறுத்தவில்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கருத்து தான் இறுதி முடிவாக அமையும். நான் நன்றாக பழகியவன் என்ற முறையில் சசிகலா வெளியே வந்தாலும் அவரால் இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த தொந்தரவும் வராது என்று நினைக்கிறேன். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து தான் எங்களுடைய முடிவை தெரிவிக்க முடியும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா ஆகியோர் பேசியதெற்கெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் பதில் சொல்லிவிட்டார். சின்னம், கட்சி உள்ளிட்ட அனைத்துக்கும் சொந்தக்காரர்களாக மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளனர். இவ்வளவு போராட்டத்தையும் இந்த கட்சியை எதிர்த்து சசிகலா மேற்கொண்டார். இவை அத்தனையும் டிடிவி.தினகரனனின் தூண்டுதலால் நடத்தப்பட்டது. எனவே, இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை. சசிகலா வெளியே வந்தாலும் டிடிவி.தினகரனை தலைமையாக கொண்டு அவர் செயல்படமாட்டார். எனவே, சசிகலாவிற்கு நல்ல ஓய்வு தேவை என்பதே என்னுடைய கருத்து. அவர் வெளியே வந்து என்ன முடிவு செய்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் எடுத்த சபதத்தில் ஆர்.கே.நகர் வெற்றி ஒன்றாக இருந்தது. அதன்படியே ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார். அன்றைய தினம் சசிகலா மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், தொகுதி பக்கம் செல்லாததால் ஆர்.கே.நகர் மக்களின் கோபத்திற்கு டிடிவி.தினகரன் ஆளாகியுள்ளார்.

இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் பாதிப்பு இல்லாமல் சசிகலா ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளது என்றே நான் கருதுகிறேன். ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்தையும் தினகரனிடம் ஒப்படைத்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார். ஆனால், இன்றைய தினம் தன்னிடம் என்ன வைத்திருக்கிறார் என்பதை டிடிவி.தினகரன் நினைத்துப்பார்க்க வேண்டும். அவரை நம்பி வந்த அனைவரும் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். பலர் வாழ்க்கை அவரை நம்பி வீண் போய்விட்டது. ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்தையும் தினகரனிடம் ஒப்படைத்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார். ஆனால், இன்றைய தினம் தன்னிடம் என்ன வைத்திருக்கிறார் என்பதை டிடிவி.தினகரன் நினைத்துப்பார்க்க வேண்டும்.

Tags : change ,AIADMK ,Senthamizhan ,Deputy General Secretary , There will be a big change in the AIADMK: Senthamizhan, AIADMK Deputy General Secretary
× RELATED பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை...