மக்கள் சிரமப்பட்டு வரும்போது வரி வசூலிப்பதில் மோடி மும்முரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:  மக்கள் பண வீக்கத்தினால் சிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி அரசு வரி வசூல் செய்வதில் மும்முரமாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே வாரத்தில் நான்காவாது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.  

இது குறித்து ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி, ஜிடிபி, பெட்ரோல், டீசல் விலையில் மகத்தான வளர்ச்சியை கொண்டு வந்துள்ளார். பணவீக்கம் காரணமாக மக்கள் துன்பம் அடைந்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி அரசோ வரி வசூல் செய்வதில் மும்முரமாக இருந்து வருகின்றது,” என குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.70 ஆகவும் மும்பையில் ரூ.92.28 ஆகவும் உள்ளது. இதேபோல், டீசல்  டெல்லியில் ரூ.75.88க்கும் மும்பையில் ரூ.82.66க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: