காங்.தான் நேதாஜியை கொன்றது: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் நடந்த பாஜ பொதுக் கூட்டத்தில் பாஜ எம்பி சாக்‌ஷி மகராஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘சுபாஷ் சந்திரபோசை காங்கிரஸ் கட்சிதான் கொன்றது என்பது எனது குற்றச்சாட்டு. மகாத்மா காந்தி அல்லது ஜவஹர்லால் நேருவோ சுபாஷ் சந்திரபோசின் புகழின் முன் நிற்க முடியாது?” என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாஜ எம்பி இதுபோன்று சர்ச்சை கருத்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திரபோராட்ட இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945ம் ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைபேவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட நேதாஜி மரணம் குறித்த மனுவிற்கு பதிலளித்த மத்திய அரசு, விமான விபத்தில் உண்மையில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தது. நேதாஜி குறித்து வெளியிடப்பட்ட ஆவணங்களில், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களை கண்காணிப்பின் கீழ் வைக்கும்படி புலனாய்வு அமைப்பிற்கு நேரு உத்தரவிட்டு இருந்தார். 1948ம்-1968ம் ஆண்டுகளுக்கு இடையே நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்த கடிதங்கள் அனைத்தும் புலனாய்வு பணியகத்தினால் படித்து பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: