ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’

சென்னை: ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’ புதிய விளம்பரத்தை சமூக ஊடகங்களில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். ஜோஸ் ஆலுக்காஸின் புதிய 2 நிமிட விளம்பரமான, தென்னிந்திய நடிகை திரிஷா தோன்றும் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’ என்னும் விளம்பரம், சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதைப்பற்றி பலர் பேசி வருகின்றனர். இந்த விளம்பரப் படம் திரிஷாவால், அவரது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என 4 மொழிகளில் வெளியிடபட்டுள்ள இந்த விளம்பரம் தென்னிந்தியா முழுவதிலும் பரவலாக மிகப் பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. இந்த விளம்பரப் படம் நம் நாட்டில் உள்ள பெண்களின் நிலை குறித்து சிந்தனையைத் தூண்டுகிறது. ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை, தடைகளை சந்தித்தாலும் அவற்றை வெற்றிகொண்டு, நம் பெண்கள் ஒளிர்கிறார்கள் என்பதையே இந்த விளம்பரம் காட்டுகிறது. ஜோஸ் ஆலுக்காஸ், இத்தகைய பெண்களை ‘‘ஒவ்வொரு நாளும் சூப்பர்ஸ்டார்ஸ்’’ என்று குறிப்பிட்டு, ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’மூலம் தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.

Related Stories:

>