இளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரை சேர்ந்தவர் ராஜன்(34). அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூபர்வைசராக வேலை செய்து வருகிறார் வீட்டின் மாடியில் தனியார் தொழிறசாலையில் வேலை செய்யும் 2 பெண்கள் தங்கியுள்ளனர். இரண்டு வீடுக்கும் ஒரே பாத்ரூம்தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜன் மனைவி தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். ராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார். மேலும், ராஜன் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு. வெளியே வரும்போது குளியல் அறையில் செல்போன் விடியோவை ஆன் செய்து விட்டு வருவான். பிறகு, பெண்கள் குளித்துவிட்டு வந்த பிறகு. குளியல் அறைக்கு சென்று தன் செல்போன் ஆன் செய்து, காட்சிகளைப் பார்த்து ரசித்து வந்தது வாடிக்கையாக நடந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை, மேல் வீட்டில், குடியிருந்த பெண்களில் ஒருவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது பாத்ரூமில் மறைத்து வைத்திருந்த செல்போனை கண்டுபிடித்துள்ளார். அந்த போனை எடுத்து பார்த்து அதிர்ந்துள்ளார். அது ராஜன் செல்போன் என்று தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் ராஜனை அடித்து, ஸ்ரீபெரும்பதூர் போலீசிடம் ஒப்படைந்தனர். பின்னர், போலீசார் அவனது செல்போனை ஆய்வு செய்த போது கடந்த சில நாட்களாகவே தன் செல்போனில் பாத்துரூமில் மறைத்து. அப்பெண்கள் குளிப்பதை படம் எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. உடனே, அவனை கைது செய்தனர்.

Related Stories:

>