விரைவில் குணமடைந்து சசிகலா தமிழகம் திரும்ப பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேட்டி

சென்னை: .சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைத்து மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மக்கள் பிரதிநிதிகளுக்கும் தடுப்பூசி போடப்படும். அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டார். அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடித்தால் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாகிவிடும். பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த அலை உருவாக வாய்ப்பாக அமைந்து விடும். அதனைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>