சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் 30ம் தேதி சென்னையில் ஆலோசனை: தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் அதிமுகவுக்கு அடுத்து தேமுதிக தான் பெரிய கட்சி. எனவே, கூட்டணியில் உள்ள எங்களுக்கு மற்ற கட்சிகளை விட அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்காத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று் தேமுதிக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 30ம் தேதி தேமுதிக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், தேமுதிகவின் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக புதியதாக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் 30ம் தேதி( சனிக்கிழமை) காலை 10.45 மணியளவில் நடைபெற உள்ளது.

அனைவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மக்களிடம் தேமுதிகவுக்கு உள்ள செல்வாக்கு குறித்தும், மக்கள் தேமுதிக குறித்து என்ன நினைக்கிறார்கள் என்றும் கருத்து கேட்கப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டணியில் சேரும் பட்சத்தில் எத்தனை தொகுதிகளை கேட்பது, எந்தெந்த தொகுதிகளை பெற வேண்டும். என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories:

>