ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் ஆளுநர் ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் தமிழக ஆளுநர் விடுதலை செய்யலாம். இவர்களை விடுவிப்பதில் ஆளுநர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து, 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே தமிழக ஆளுநர் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்கி, ஒரு வாரத்திற்குள்ளாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>