கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை

ஊத்துக்கோட்டை: ஆரணி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்து இன்றுடன் 48 நாட்கள் ஆகின்றன. இதனால் காலை, மாலை என இரண்டு வேளையும் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை கோயில் பூசாரி பூஜை செய்ய வந்தபோது கோயிலின் கதவில் பூட்டியிருந்த 3 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி பொட்டு மற்றும் உண்டியலில் இருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதில், அதிர்ச்சியடைந்த பூசாரி கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். புகாரின்பேரில் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>