தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கமா?.. தமிழகத்தில் இன்று 2,494 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்: கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக 10,256 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

சென்னை: சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,494 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 9 நாட்களில் கோவிசீல்டு, கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளும் 61,720 பேருக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், பயத்தை போக்கும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. ஜனவரி 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கோப்பவர் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஜன.18-ம் தேதி அதிகபட்சமாக 10,256 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகம் முழுவதும் இன்று 2,494 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 9-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2404 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 90 பேர் போட்டுக்கொண்டனர். இதுவரை கோவிசீல்டு 60,369 பேருக்கும், கோவாக்சின் 1,351 பேருக்கும் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 நாட்களில் 61,720 பேருக்கு தடுப்பூசி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>