×

மங்கலதேவி கண்ணகி கோயில் அருகே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி

கூடலூர்: கேரளாவின் இடுக்கி மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களில் 925 கிமீ பரப்பளவில் உள்ளது பெரியாறு புலிகள் சரணாலயம். கடந்தாண்டு நவம்பர் மாதம் பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்கலதேவி வனப்பகுதியில் தேக்கடி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியில் தாய் புலியால் கைவிடப்பட்ட சுமார் 60 நாள் வயதுடைய பெண் புலிக்குட்டியை வனத்துறையினர் பார்த்தனர். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அந்த புலிக்குட்டியை மீட்டு, தேக்கடி வனவிலங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனையடுத்து தாய் புலியை கண்டுபிடிப்பதற்காக பெரியார் சரணாலயம் மற்றும் அதை ஒட்டி தமிழக எல்லையில் உள்ள மேகமலை வனவிலங்கு சரணாலய பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன, ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இதனால் அந்த புலிக்குட்டியை வனத்துறையினரின் தங்களது பராமரிப்பில் வைத்துள்ளனர். இந்த புலிக்குட்டி சுயமாக வேட்டையாட கண்ணகி கோயில் அருகே உள்ள கரடிக்கவலை வனப்பகுதியில், பெரியாறு புலிகள் சரணாலய துணை இயக்குநர் சுனில் பாபு தலைமையில், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் ஷியாம் சந்திரன், மற்றும் சிபி ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர். இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், ‘‘மனித வாடை தெரியாமல் இருக்க 2 மாதங்களாக, வெளி உலகத்திற்கு காட்டாமல் புலிக்குட்டியை பாதுகாத்து வருகிறோம். தற்போது புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சியளிக்கிறோம். இந்த பயிற்சிக்கு பின்னால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் கடின உழைப்பு உள்ளது’’ என்றனர்.

Tags : temple ,Mangaladevi Kannaki , Hunting training for tiger cub near Mangaladevi Kannaki temple
× RELATED மணிகண்டீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்