×

திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு மாலையில் பரிசு வழங்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாவது நாளான இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வாலிபால் கழகத்தைச் சேர்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் பொன்னியின் செல்வன், பள்ளி உடற்கல்வி இயக்குனர் வருண்குமார் கூறுகையில், ‘இன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பள்ளி செயலாளர் கிருஷ்ணன், கால்பந்து கழக தலைவர் துளசி மற்றும் செயலாளர் செல்வகணேஷ், துணைத் தலைவர் முரளி, கைப்பந்து கழகத்தை சேர்ந்த ஞானசிகாமணி, ரங்கராஜன், நாகராஜன், முன்னாள் தலைமையாசிரியர் வெங்கடாஜலம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு, சான்றிதழ் வழங்க உள்ளனர்’ என்றார்.

Tags : District level volleyball tournament ,Srivilliputhur , District level volleyball tournament at Srivilliputhur
× RELATED திருவில்லிபுத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு