பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி குறைந்திருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் என்று அனைத்துமே இயல்பு நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா இயல்பாக உணவை உட்கொள்வதாகவும், பிறரின் உதவியுடன் எழுந்து நடப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விக்டோரியா மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.