அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளும் ஆன்லைனில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தொலைதூர கல்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடக்கும் என்றும், இதற்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் தேர்வு எழுத பதிவு செய்து வந்தனர்.

இதனையடுத்து, தற்போது பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

* ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

* தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.

* லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம்.

* 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும்.

Related Stories: