சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

திருச்சி: சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சமீபத்தில் நடந்த சர்வதேச அளவிலான 7வது இந்தோ - நேபாள கிராமப்புற இளைஞர் விளையாட்டு போட்டியில் இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி மற்றும் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், நேபாளத்தின் போகாராவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 7 வது இந்தோ-நேபாள கிராமப்புற இளைஞர் விளையாட்டு (2020-21) போட்டியில் சீனியர் இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் கல்லூரி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். திருச்சி தேசிய கல்லூரி மாணவர் சந்தோஷ் மற்றும் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தர்ஷன் குமார், இந்த போட்டியில் 4 ஆட்டங்களில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு அணிக்கு எதிராக கடுமையாகப் போராடி இறுதிப் போட்டியை வென்றது உட்பட 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், திருச்சி வந்த மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன், கல்லூரி துணை முதல்வர் மற்றும் உடற்கல்வி துறை தலைவர் பிரசன்ன பாலாஜி, பேராசிரியர் ஜாபிர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Related Stories:

>